Saturday, September 26, 2015

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-4


மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-4

மூன்றாம் பாகத்துடன் பூர்த்தி என எனது மலைநாட்டு விஜயத்தை பற்றி எழுதிய பிறகும்...

ஒரு சிறு பகுதியை இணைக்கலாம் என்று தோன்றியதால் ...பகுதி -4

திருவனந்தபுரம் பத்மநாபன் கோவில் ஐந்து நிலவறையில் நான்கு அறைகள் திறக்கப்பட்டு, அங்கு இருந்த பல தங்க மற்றும் வைர ஆபரணங்கள் பொதுவாக எடை மட்டும் போடப்பட்டன என்று அறிகிறோம் (விலையெல்லாம் போட்டுருக்க முடியாது) 


இதில் ஐந்தாவது நிலவறையை பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன ...அது பல மந்திர சக்திகளால் மூடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது...


இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தவுடன் இந்த புதையல்கள் சேமித்த 18ஆம் நூற்றான்டின் மக்களை பற்றியும் பல விசயங்களை படித்தேன்...



அதில் மிக சுவாரசியமான ஒன்று ராஜா தர்மராஜாவின் சகோதர்ர் ஒருவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லவராக திகழ்ந்ததும்... அன்றைய காலத்தில் புகழ் வாழ்ந்த பிதாம்பர ஐயர் உடன் தொடர்பில் இருந்தார் என்பதும் கிடைத்த விசயம்....









இந்த பிதாம்பர ஐயர் "ஜாலத்திரட்டு"  என்கிற ஒரு மந்திரசாஸ்திர புத்தகத்தை எழுதியிருக்கிறார்.   எனது அனுமானம்.. ஒரு அரசனின் சகோதரரே இந்த கலையில் சிறந்து விளங்கியிருந்திருக்கும் போது... இந்த பொக்கிஷங்கள் நிச்சியமாக மந்திர சக்திகள் கொண்டு மூடப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம்....










சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாப கோவிலில் இருந்த தாந்திரிகள்  திப்பு படைஎடுப்பின் பொது அவனை விரட்டி கீழே விழ வைத்து விரட்டிய விஷயத்தை அது நடபதர்க்கு முன்பே சொல்லிய விசயம் ... அரசன் பத்மநாபர் முன்பு வேண்டியது .. போன்ற பல விசயங்கள் 





ஜாலம் என்பது "கண்கட்டு வித்தை" என்று சொல்லப்படுகின்ற  இல்லாததை  இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் காட்டுவது ..

நமது பாரதத்தில் இந்த வித்தையை மக்களை மகிழ்விக்கவும் ..இதை அறிந்தவனின் மன எண்ணம் போல நல்லவனாக இருப்பின் நன்மையையும் தீயவனாக இருப்பின் தீயவையும் செய்வான் ..


இந்த ஜால வித்தை செய்ய இரண்டு விதமான விசயங்கள் தேவை ..பல விதமான மூலிகைகள் மற்றும் மந்திர அனுஷ்டானங்கள் ...மற்றும் இறந்த மனித மற்றும் மிருகத்தின் உடற்பாகங்கள் !!!

மனிதனின் மூளையில் உள்ள பலவிசயங்களை ஏமாற்றி .. நம்ப செய்யும் விசயமாக இது இருப்பதால் ..நம்மை ஒரு நபரிடம் அதிகமாக அறிவிற்கு மீறிய நம்பிக்கை வைக்க செய்யும் வித்தை (உலகமே கேவலமாக பேசும் சாமியாரிடம் பெண்கள் கூட்டமாக வணங்கும் வித்தை !!)


நீங்கள் செய்யும் வியாபரத்தலத்தில் வந்து வியாபாரம் செய்பவர் சாதகமாக நடக்கும்படி செய்தல் ... போன்றவை இவற்றினால் செய்யலாம் !!

நாம் வணங்கும் பல தெய்வ ஆலயங்களிலும் பல வித மூலிகை கொண்டே நமது மன ஆக்ரஷ்ண மற்றும் மன அமைதி போன்ற பல நல்ல விசயங்களை செய்விக்கிறார்கள் ..

இந்த மூலிகைகளை தாண்டி மிக வேகமாகவும் .. ஆக்ரோஷமாகவும் வேலை செய்ய... மனித மற்றும் மிருகங்களின் உடல் பாகங்களை பயன்படுத்தும் வித்தையும்  செய்வதுண்டு ..

சிறிது காலத்திற்கு முன் பல பத்திரிக்கைகளில் வந்த சென்னையை சேர்ந்த ஒரு கேரளா வைத்தியர் . பல அரியவகை மிருகங்களை வேட்டையாடினார் அதனால் கைது என்று செய்தி படித்து இருப்பீர்கள் .(அவரை அந்த கேஸ் நடந்து முடிந்த பிறகு .. பல கோடிகள் குடுத்து வெளியில் வந்து பிறகு நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசினேன் ஒரு நண்பருடன் .. இதை பற்றி இல்லை .. ) . அதுவும் ஒரு வகை ஜால வித்தையே .. மிருகங்களின் உறுப்புகளை பயன் படுத்தி (சிறிய அளவில் ) பல வித தீராத வியாதிகளை சில நாளில் குணப்படுத்த முடியும் !!

இந்த வைத்திய முறைக்கு ராஜவைத்தியம் என்று பெயர் .. சில நாளில் எந்த வியாதியையும் குணப்படுத்த முடியும் !! (அப்போ இதை ஏன் செய்யவில்லை அப்போலோ ஆஸ்பிடல் எல்லாம் எதற்கு என்று கேட்பது புரிகிறது ..இதை செய்பவன் காசு வாங்க கூடாது இல்லை என்றால் அந்த கருமம் அவனை பீடிக்கும் .. நான் சந்தித்த அந்த வைத்தியர் .. வாராவாரம் சில கோடிகள் குவித்தார் .. வாங்கிய பல கார்களை நிறுத்த இடமில்லாமல் ஒரு சினிமா தியட்டரை வாங்கினார் !! கடைசியில் கேஸ் இல் மாட்டி இப்போது ஒரு டூ வீலரில் போகிறார் !!

இதே ஒரு வகை மந்திர மை செய்யும் விதம் .. பயன்படும் பொருள் மனித மண்டை ஓடு ... !! இதில் பயன் படுத்த சொல்லி இருக்கும் பல பொருள்கள் பற்றி விவரமாக விளக்கினால் .. அது செய்யும் கேடுகள் பற்றி அறிவோம் !!, இன்று காணும் நவீன உலகின் பல அபத்தங்கள் விலக்கப்படும் !!! அதில் ஒன்று நாதநீர் .. (menstrual blood) ..இவைகள் பலவித மனித மனதில் எதிர்ப்புகளை உண்டாக்கும் !!





 காலத்தின் நன்மையால் விஞ்ஞான வளர்ச்சியால் இவைகள் அழிந்து போயின !! இதில் சொல்லப்பட்ட பல விசயங்களை கொண்டு நாம் அன்றாடம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி எழுத நினைக்கிறேன் ..

மந்திரங்கள் .. மற்றும் ஜாலவித்தையில் சொல்லப்பட்ட பல கெடுதலான தவிர்க்க வேண்டிய விசயங்கள் பற்றி ..


எவ்வளவு பேர் கேட்கா விரும்புகிறீர்கள் ???





1 comment: