Sunday, September 20, 2015

மலைநாடு வி(ஜி)ஜயம் பாகம் -1

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-1


இன்று காலை (21.09.2015)2 மணிக்கு ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தேன். 

நேற்றைய திருவனந்தபுரம் கோவில்வாசல் செல்பி படத்தை  போட்டுவிட்டு உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகமாக கிளப்பிவிட்டுவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்..

நான் முன்னமே எழுதியிருந்த மாறி ஒரு கோவிலுக்கு போனால்... அது எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது (ஸ்தல புராணக்கதைகளில் எனக்கு அவ்வளவு நாட்டமில்லை) அந்த கோவில் அனுபவித்த கொடுமைகள் என்ன?? (இந்துக்கோவில்கள் எல்லாம் துலுக்க மற்றும் அந்நிய ஆதிக்கத்தின் தாக்கத்தை  அனுபவித்த விசயம் அனைவரும் அறிந்ததே)

திருப்பதிசாரம் கோவில் வாயில் இருந்த அம்மாச்சி வீடு (இதன் படத்தை முன்னமே போட்டு இருக்கிறேன் ) பற்றி கேட்ட செய்திகள் என்னை மிகவும் குழப்பி விட்டன ..

இராஜாவின் மனைவி ராணி இல்லை அவனது சகோதரிதான் ராணி .. அந்த சகோதிரி ராணியின் மகனே அடுத்த ராஜா !! 

ராஜாவின் திருமணம் .. அந்த திருமணத்தால் உண்டாகும் வாரிசுகள் .. அவர்களின் உரிமைகள் !! (அவர்களுக்குதான்  ஆளும் உரிமை இல்லையே !!) பல முறை என்னிடம் ஒருவர் விளக்கியும் புரியவில்லை !!  எனது செல்போன் மூலமாக மெல்ல படித்து .. புரிந்து கொண்டேன் ..

நமது தமிழக சரித்திரமே நமக்கு பாட புத்தகத்தில் இல்லை .. நமக்கு ராபர்ட் கிளிவே மற்றும் வாரேன் ஹேஸ்டிங் பற்றி தெரிந்த அளவிற்கு தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்களை பற்றி தெரியவில்லை !!

இப்போது நான் எழுதப்போவது .. இந்த புரியாத கேரளா சரித்திரம் பற்றி அல்ல .. பயம் வேண்டாம் ..

அனந்தபத்மநாபர் கோவில் உள்ளே இவ்வளவு செல்வம் சேர்ந்த கதை .. பற்றியே !! 

இது ஒரு விரிவான ஆராய்ச்சி கட்டுரை அல்ல .. இது  சாதாரண பாமரன் ரெண்டு நாளில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளின் சாரம் மட்டுமே .. பல தவறுகள் இருக்கலாம் ..


நாம் இன்று காணும் கேரளா என்கிற மலைநாடுகள் முன்பு தமிழகத்தின் ஒரு பகுதியாக சேர நாடு என்று வழங்கப்பட்டு தமிழ் மொழி பேசும் மாநிலமாகத்தான் இருந்தது ..

நமது அரங்கன் கோவிலில் உள்ள சேர குலவல்லித்தாயார் .. குலசேகர ஆழ்வார் (இவர் சேர குல அரசரே ) ஆகியோர் தமிழ் பேசி பாசுரம் இயற்றி .. அரங்கனுக்கு மகளை திருமணம் செய்துவித்த சங்கத்தமிழர்களே !!!

ஒரு 20-30 அடி உயர மதிர் சுவருகளை கட்டி கோட்டை என்று அழைத்துக்கொண்டு .. சுகமாக வாழ்ந்து வந்த காலத்தில் பல ஆயிரம் அடி உயர இயற்கை மலை சூழ் பகுதியாக இருந்த இந்த மலை நாட்டின் மீது பலர் படை எடுக்கவே பல ஆண்டுகள் தயக்கம் காட்டியே வந்தார்கள் !!

அந்நிய படையெடுப்பு இல்லாத காரணத்தாலும்... இந்த பகுதி மக்களின் எளிமையான வாழ்க்கை முறை காரணத்தாலும் (அவர்கள் கோவில்களில் இன்றும் ஒரு எளிமையும்... பக்தியும் மிகுந்து காணப்படுவது அனைவரும் அறிந்ததே  ) 

ஆளை மிரட்டும் அதிக செலவு செய்யும் தன்மை இல்லாத அரசர்கள் .. இவை அவர்களை நிறைய கோவில்களுக்கு (நிலக்கொடை எதுவும் அதிகம் இல்லை .. காரணம் .. அன்று மலை நாடுகளில் மக்கள் தொகை குறைவு .. இன்றும் விவசாயம் கம்மிதான் !!!)ஸ்வர்ண தானம் செய்து வந்திருக்கிறார்கள் !!!

இவர்களின் தனித்தன்மை .. இவர்களிடம் வியாபார செய்யவந்தவர்களிடம் (spice trade) பொன்னை பெற்றுக்கொண்டு அதை நிறைய கோவில்களுக்கு கொடையாக சேர்த்து வைத்துள்ளனர் !!

கொஞ்சம் விரிவாக பார்ப்போம் .. 


விஜயராகவன் கிருஷ்ணன் 

3 comments:

  1. அருமையான முயற்சி........வாழ்த்துக்கள்....வி(ஜ)ஜியம்....மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.அரங்கன் அருள்..

    ReplyDelete
  2. அம்மாச்சி வீடு பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்....

    ReplyDelete
  3. nice effort sir. looking forward to it

    ReplyDelete