Thursday, September 24, 2015

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-3

                       Karthika Thirunal Rama Varma (1758 – 1798)


மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-3




      பத்மானாபர் கோவில்  பொக்கிஷ நிலவறைகள் கார்த்திகை திருநாள் ராம வர்மா (தர்மராஜா என்று அழைக்கப்பட்ட ) இவர் காலத்தில் அவரது மந்திரி ராஜா கேசவதாசினால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை பார்த்தோம்!!

     தர்மராஜா தனக்கு பின்னால் அரசனாக  வரப்போகும் பால ராமவர்மாவை .. இளவரசுப்பட்டத்தில் இருந்து விளக்கி வைத்திருந்தார் .. காரணம் .. அவரது ஊதாரித்தனம் ..பெண் பித்தும் .ஆயினும் . காலத்தின் கொடுமை .. பல சதிகளுக்கு பின் பால ராமவர்மாவே அரசர் ஆனார் ..


     இந்த சதிக்கு பின் புலமாக இருந்து செயல் பட்டவன் ஜெயந்தன் நம்பூதிரி.. இவன் கொச்சின் சமஸ்தானத்தை சேர்ந்தவன் ... இவனது சதி வேலைகளை எதிர்த்தாலும் ..இவர்களால் பொக்கிஷ அறை ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியாததாலும் .. “விலக்கு நீட்டு “ என்கிற வேலை நீக்கு ஆணையை அளித்து  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விஷம் வைத்து "ராஜா கேசவதாஸ்"  கொல்லப்பட்டார் !! இதை பற்றி அன்றைய east India company கடிதங்களில் கூறப்பட்டதாவது ...




ஒருபுறம் .. திவான்கள் ... மறுபுறம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி என்று பல வழிகளில் 19 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சுரண்டப்பட்டு திவால் ஆக்கப்பட்டது ...

பல சந்தர்ப்பங்களில் நிதி இல்லாமல் திருவிதாங்கூர் திவால்நிலைக்குச் சென்றிருக்கிறது.  பிரிட்டிஷ் நிதிவசூல் கெடுபிடிகளை, மிரட்டல்களை, கிட்டத்தட்ட வழிப்பறிக்கொள்ளைக்குச் சமானமான பிடுங்கல்களை நாம் ஆவணங்களில் காணலாம். மன்னர்கள் கெஞ்சுகிறார்கள். மேலும் மேலும் கெடுநீட்டிக்கிறார்கள். முக்கால்வாசி பணம் கொடுத்து ஆசுவாசம் கொள்கிறார்கள். மிகையான வரிவிதிப்பால் அஞ்சுதெங்கு, ஆலப்புழா  ஆகிய துறைமுகங்கள் படிப்படியாக அழிவதை மன்னர்கள் முறையிட்டு  மன்றாடிச் சொல்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை அடிமாட்டுக்கு அனுப்பும் முன் கடைசியாகக் கறக்கும் பசுவாக நினைத்தனர்.


மூலம் திருநாள் மகாராஜா 1897ல் பேச்சிப்பாறை அணையைக் கட்ட முயன்றபோது நிதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிறிய குளங்களை தமிழகத்தைச் சேர்ந்த தனியார் விவசாயிகளுக்கு வயலாக விற்று நிதி திரட்டினார். அரசர் நிலக்கிழார்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்றுகிடைக்கின்றன


இதை பற்றி நீங்கள் நிறைய படிக்க ஆசை பட்டால் ... பார்க்க வேண்டியது ...

>>>>>திருவிதாங்கூர்<<<<<






அவர்களின் வரவு செலவு பற்றிய செய்திகள் பல உள்ளன .. அவர்கள் தினப்படி செலவிற்கே தடுமாறிய கதை புரியும்!!! இவ்வளவு அளவிற்கு ஒரு தங்கப்புதையல் இருப்பது தெரிந்து இருந்தால் நிச்சியமாக வெள்ளைக் கார கொள்ளையர்கள் மற்றும் பல சதிகாரர்கள்  விட்டு வைத்திருக்க மாட்டார்கள் ..

இந்த மிகப்பெரிய போகிஷத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு காட்டிகுடுத்து விட்டு சென்ற அந்த மாபெரும் மந்திரி ...ராஜா கேசவதாஸ் என்கிற மகான்தான்.. (மந்திரி என்றாலே கொள்ளைக்காரன் என்கிற இன்றைய நூற்றாண்டில்)  .. தன உயிர் மாண்டாலும் வாய் திறவாமல் அவர் சென்றதால் .. இவை நமக்கு இன்று கிடைத்துள்ளன !!!

இப்படி பட்ட அந்த ராஜா கேசவதாஸ் பற்றிய ... சிறு தகவல் ...



இந்த நிலவறை வாசல்கள் .. பல மந்திர சக்திகளால் மூடப்பட்டு இருந்தன என்றும் சொல்லுகிறார்கள் .. தர்மராஜாவின் சகோதரர் ஒருவர் மக்கியரம் திருநாள் (மிருகசீருஷம் ) ஒரு மிக சிறந்த மந்திர வாதியாக திகழ்ந்தார் என்றும் இவர் அந்த காலத்தில் தமிழகத்தில் மிக புகழ் வாய்ந்த  பீதாம்பர ஐயர் என்கிற மந்திரவாதியுடன் தொடர்பில் இருந்தார் என்று சொல்லப்படுக்றது 
இவர் 1786 இறந்து விட்டார் (இந்த  பீதாம்பர ஐயர் எழுதிய “ஜாலத்திரட்டு” என்கிற சுடுகாட்டு மந்திர வாத புத்தகத்தை நான் (விஜி!!)  பயத்துடன் படித்து இருக்கிறேன் !!) 


நிறைவு ...








1 comment:

  1. நிறைவா????????..... அவ்வளவு தானா?.......

    ReplyDelete