Thursday, September 24, 2015

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-2

       
                                          Uthradom Thirunal Marthanda Varma(1991-2013)


பத்மநாப கோவில் சுவர்ண குவியல் வெளியே தெரிய வந்து இன்று உலகமே அறியும் கோவிலாக அது அறியப்பட்டு விட்டது ..

இதில் முதல் கேள்வி .. இந்த அளவிற்கு உள்ளே சில லக்ஷம் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள தங்கம் உள்ளே இருக்கிறது என்று இந்த கோவிலின் .. பாதுகாவலர்களான திருவாங்கூர் அரசர்களுக்கு தெரியுமா ?? என்றால் .. பல சரித்திர விசயங்களை பார்க்கும் போது .. சந்தேகமாகதான் இருக்கிறது !!


ஆம் .. அவர்களுக்கே இது தெரியாவில்லை என்பதே உண்மை .. ஏன் என்று பார்ப்போம் .. அவர்களுக்கு பல அறைகள் இருக்கின்றன .. அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்ற நினைக்கிறேன் .. காரணம் 

மறைந்த மன்னர் சித்திரைத் திருநாள் பாலராமவர்மா அவர்கள்,திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயிலில் கருவறைக்கு முன்னால் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்ற முகமண்டபத்தைப் பொன்வேயவேண்டும் என்ற கனவைக்கொண்டிருந்தார். அதற்கான நிதியை அவரால் உருவாக்க முடியவில்லை. அவரது ஆசையை நிறைவேற்ற இப்போதைய மன்னர் முன்பு இருந்த உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா முயன்றார்..(படத்தில் உள்ள வயதானவர்) . அப்போது அவருக்கு ஓர் ஆலோசனை சொல்லப்பட்டது. ஆலயத்தில் கருவறை அருகே நிரந்தரமாகப் பூட்டியே இருக்கும் ஆறு ரகசிய அறைகளில் சிலவற்றில் அனந்தபத்மனாபனுக்குச் சொந்தமான பொன் இருப்பதாகவும் அவற்றை எடுத்து உருக்கிப் பயன்படுத்தலாமென்று!!


மார்த்தாண்டவர்மா அதற்காக 2007ல் முயன்றார். அப்போது அது செய்தியாக
வெளியே தெரியவே அப்படி செய்ய மன்னருக்கு உரிமையில்லை என்று வழக்கறிஞர் டி.பி.சுரேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தை அணுகினார்கள். அனந்தபத்மநாபசாமிகோயிலின் பரம்பரை அறங்காவலர் மன்னர்தான். ஆனால் கோயில் அவருக்குச் சொந்தமானதல்ல. இந்திய அரசின் சொத்து அது. ஆகவே டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது


2011ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆலயத்தை அரசுடைமையாக்கவும், பொதுமக்கள், அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த ரகசிய அறைகளைத் திறந்து பார்க்கவும் ஆணையிட்டது. அவ்வாறு திறந்தபோதுதான் உலக வரலாற்றின் மிகப்பெரிய தங்க பொக்கிஷம்  ஒன்று கிடைத்திருக்கிறது– இன்னும் ஓர் அறை திறக்கவேண்டியிருக்கிறது. இப்போது பல லக்ஷம் கோடி என கணக்கு ஏறிக்கொண்டு இருக்கு அதன் மதிப்பு !! 


இந்த போற்குவியலகளை பற்றிய சரித்திர குறிப்புகளை பற்றி நாம் செல்லவேண்டியது  1789 .. திப்புசுல்தான் கேரளா நாட்டின் மீது தனது கொடுமையான படையெடுப்பின் துவக்கத்தில்தான் .. 

அப்போது திருவாங்கூர் நாட்டை ஆண்டுகொண்டு இருந்தவர் .. மிகப்புகழ் வாய்ந்த அரசர் ..நிஜ தர்மராஜா என்று பாமரகளால் அழைக்கப்பட்ட கார்த்திகைத்திருநாள் ராமவர்மா... இவரின் மதியுக மந்திரியான கேசவதாஸ் என்பவரின் திட்டமே இந்த ரகசிய அறைகளில் அரண்மனை செல்வங்களை பாதுகாக்க வைக்க வைத்த திட்டம் ..

சொல்ல மறந்து விட்டேனே .. இந்த கேசவதாஸ் தலைமயிலான படை தான் திப்புவை அடிச்சு விரட்டி பள்ளத்தில் தள்ளி .. காலை உடைத்து அனுப்பியது !! அன்றும் அந்த பத்மநாபன் (என் அரங்கனே அவன் .. என்றும் துலுக்கனை வெற்றி கொள்ள வைத்தாதில்லை !!) அந்த காயமே அவனை ஸ்ரீரங்க பட்டினத்தில் .. ரோட்டில் தப்பி ஓடும் பொது சுட்டு கொல்ல ஏதுவாக்கியது !!  

எனவே ... அந்த செல்வமும் நாடும் தப்பியது .. அரங்கனாகிய அந்த பத்பநாபன் .. நாட்டையும் அந்த பெரும் செல்வத்தையும் காப்பாற்றி 1790 ஆண்டில் இருந்து வைத்து கொண்டு உள்ளான் !!!

..திருவாங்கூர் என்பது ஒரு சிறிய சமஷ்தானமே .. அவர்கள் எங்கும் படை எடுத்து செல்லவில்லை .. இவர்களிடம் எப்படி இவ்வளவு செல்வம் வந்தது?? 

1740 டி-லென்னாய் என்கிற டச்சு காரன் இவர்களிடம் தோல்வி அடிக்கிற வரை (அவர்கள் குறிப்புகள் இருந்து ) திருவாங்கூரில் நில வரி கூட கிடையாது !!

எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் .. இவர்களின் இந்த அளவு செல்வம் வெள்ளைக்கார்களிடம் இவர்கள் நடத்திய (மிளகு, கிராம்பு, ஏலம் போன்ற) வாசனைத் திரவியம் வியாபாரத்தில் கிடைத்த தங்கம் மட்டுமே !! 

இதில் திப்புவின் கடுமையான இந்து கோவில்களை இடித்தல் போன்ற கொடூரங்களால் .. பல கோவில் சிலைகள் மற்றும் பல அரச மற்றும் பணக்கார பிரபுத்துவ குடும்பங்கள் தங்கள் செல்வங்களுடன் திருவாங்கூர்இல் தஞ்சம் அடைந்தன ...


அனைத்து செல்வங்களும் நாம் முன்பே பார்த்த கேசவதாஸ் திட்டத்தின் படி பத்மநாபனிடம் ஒப்படைக்கப்பட்டன !! 

நிற்க ... ஒரு சிறு எண்ணம் ..

சரி நமது தமிழகத்தை பார்த்தால் .. இந்திய நாட்டிலே வெளி தேசங்களில் சென்று படை கொண்டு  ஆண்டவன் என்றல் .. அது ராஜேந்திர சோழன்தான் .. அவனிடம் இருந்த தங்கம் மலை அளவு என்று எல்லாரும் சொல்லுகிறார்கள் !! அவைகள் எங்கே?? 

அது சரி .. நமது ஸ்ரீரங்கம் ?? 1321 முகமது பின் துக்ளக் (உலுக்கான் ) படை எடுப்பின் பொது சுமார் 90 டன் எடை கொண்ட தங்க புதையல்களை ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து எடுத்து சென்றான் என்று சொல்லுகிறார்கள் !!

பின்னர் ....1371 பிறகு நிறைய விஜய நகர ராஜாக்கள் பொன்னும் பொருளும் கொட்டி குடுத்தார்கள் .. நம் அரங்கனுக்கு .. அவை நிச்சியமாக இதை விட பல மடங்குதான் இருந்திருக்கும் !!

தொடர்ந்து பார்ப்போம்...... 

No comments:

Post a Comment